சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார். தனுஷ், செளந்தர்யா, மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உடன் புறப்பட்டுச் சென்றனர். ரஜினி புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர்.ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிறப்பு அனுமதி பெற்று ஆம்புலன்ஸில் இருந்து நேரடியாக விமானத்திற்கு ரஜினியை அழைத்துச்சென்றதால் அவரை யாரும் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல், ரசிகர்களுக்காகக் குறைந்தபட்சமாக தனது குரலிலேயே நன்றி தெரிவித்து விடலாம் என்று எண்ணிய ரஜினி தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.
தளர்ச்சியாகக் காணப்படும் ரஜினியின் குரல், அவர் உடல் நிலையை உணர்த்துவதாய் இருக்கிறது.
அந்த ஆடியோ : ‘’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா.... ஹேப்பியா போய்கிட்டு இருக்குறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன். பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்ளவு அன்பு வச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் நான் என்ன செய்யப்போறேன். என் ரசிகர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து நிற்கும்படி செய்வேன். கடவுள் கிருபை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை இருக்கு. நான் சீக்கிரமே திரும்பி வந்துடறேன். ஓகே. குட் பாய் ’’