நர்த்தகி படத்தில் கதையின் நாயகியாகவும் கதாநாயகியாகயாகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி உலக அளவில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் வாரிக் குவித்துக் கொண்டிருப்பதன் மூலம் தானும் பெருமைப் பட்டு தன் சக திருநங்கை சமூகத்தினரையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார் நர்த்தகி கல்கி.
புன்னகைப்பூ கீதா தயாரித்து பெண் இயக்குனர் விஜயபத்மா இயக்கிய நர்த்தகித் திரைப்படம் ஆணாகப் பிறந்த ஒருவன் உடற்கூறு மற்றும் உணர்வு மாற்றங்களினால் எப்படி திரு நங்கையாக மாறுகிறான்..? அதனால் சமூகம் அவனை(ளை) எந்த அளவிற்கு புறக்கணிக்கின்றது. அதனை எதிர் கொண்டு எதிர் நீச்சல் போட்டு சமூகத்தில் தம்மாலும் தலை நிமிர்ந்து, தங்களைப்போன்றவர்களைப் புறக்கணித்த சமூகத்திற்கே தங்களால் ஆன சேவைகளையும் செய்ய முடியும் என்று வாழ்ந்து காட்டும் கல்கி என்கிற திரு நங்கை கதாபாத்திரத்தில் நிஜமாகவே திருநங்கையான கல்கி சுப்ரமணியம் நடித்திருந்தார். நர்த்தகி திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் திரையிடப் பட்டு நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் திருநங்கை கல்கி சுப்ரமணியம். ஆம் ஒரு பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் ஃபிரெஞ்சு நாட்டு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் தங்கள் படங்களில் கதா நாயகியாக நடிக்க கல்கி சுப்ரமணியத்தை அணுகியிருக்கிறார்கள்.
வாழ்த்துகள் கல்கி சுப்ரமணியம்.