ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் முதன்முறையாக சீயான் விக்ரமுடன் இணையும் ராஜபாட்டை படத்துவக்க விழா ஏ.வி.எம் பிள்ளையார் கோவிலில் நடந்தது. தொடர்ந்து ராஜபாட்டையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.தீக்ஷா சேத் கதா நாயகியாக நடிக்க, வசந்தபாலன் உதவியாளர் சீனுவாசனிடமிருந்து வாங்கிய கதையினை இயக்குகிறார் சுசீந்திரன். வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் ஒரு கமர்ஷியல் மசாலாவுக்குக்கூடச் சிறப்பான கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பது வழக்கம். உதாரணம் ஜெமினி, பீமா, தில், தூள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் சகல பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த ஒரு படமாக ராஜபாட்டை இருக்கும். இதன் இளம் இயக்குனர்களான பிரதீஸ் மற்றும் சந்தோஷை ஐப்பார்க்கும் போது நீங்கள் அதனை உறுதி செய்து கொள்ளலாம். ஏனென்றால் கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த மசாலா படங்களில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த போக்கிரி படத்தின் தயாரிப்பாளர் ரமேஷுடைய புதல்வர்கள்தான் இவர்கள். அப்பா 8 அடி என்றால் பிள்ளை 16 என்பார்கள். இங்கே இந்த இருவரையும் சேர்த்தால் 32 அடி எனக்கூறலாம். ஆகவே ஒரு பிரமாண்டமான பொழுது போக்குத் திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்.