எல்லாம் அவன் செயல், அழகர் மலை போன்ற வெற்றிப் படங்களில் நடித்து ஒரு குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று விட்டவர் ஆர்கே. கதாநாயகனாக வெற்றி பெற்ற போதும், நல்ல வேடம் என்பதால் பாலாவின் அவன் இவனில் வில்லனாக நடித்தார். அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில் இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் புலிவேஷம் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் அவருடன் கார்த்திக், பிரபு, சதா, திவ்யா விஸ்வநாத், கஞ்சா கருப்பு என பெரிய நடிகர் கூட்டமே நடித்துள்ளது.
ஒரு யதார்த்தமான மனிதன், எப்படி பெரிய டானாக மாறுகிறார் என்பதுதான் கதை. இதில் இரண்டுவிதமான கேரக்டர்களை ஆர்கே செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வாசுவுக்கு தமிழில் மிக முக்கியமான படம் இது என்பதால், படம் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர். இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. புலிவேஷம் படம் பார்த்த சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
பி வாசு இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் புலிவேஷம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.