[caption id="attachment_12792" align="alignleft" width="300" caption="Director Jay Cey at Sarovaram set with Mammooty"]
[/caption]
மலையாளத் திரையுலகின் புகழ் பெற்ற மறைந்த இயக்குனர் JAYCEY அவர்களின் நினைவாக ஒரு அமைப்பு நிறுவப்பட்டு அவரது பெயரால் ஆண்டுதோறும் மலையாளத் திரையுலகில் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அவரது நினைவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன,.
JAYCEY Foundation ன் 8 ஆவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா எர்ணாகுளம் டவுன் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி, நடிகை நவ்யா நாயர், சிறந்த குணச்சித்திர நடிகர் லால் அலெக்ஸ், சிறந்த வில்லன் நடிகர் சமுத்திரக்கனி, சிறந்த இயக்குனர் லால் ஜோஷ், சிறந்த இசையமைப்பாளர் பேனி இக்னேஷியஸ், சிறந்த பாடலாசியர் கைதப்ரம், சிறந்த பாடகர் மது பாலகிருஷ்ணன், சிறந்த பாடகி ராஜலட்சுமி ஆகியோர் விருதுகள் பெற்றனர்.
டாக்டர் M பீனா IAS சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்ட இந்த விழவில் திரையுலகில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள் 7 பேருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் சென்னையில் வசித்து வருபவரும் 40 வருடங்களாக சினிமா புகைப்படப் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி வருபவருமான ஹரி நீண்டகரா வாழ் நாள் சாதனையாளர் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்.. ஹரி, மலையாள உலகின் பிரபல வார இதழான நானா உட்பட பல்வேறு பத்திரிக்கைகளுக்கு ஃப்ரீலேன்ஸ் புகைப்படப் பத்திரிக்கையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
[nggallery id=319]