ஊழலக்கு எதிரான இந்தியா என்கிற அன்னா ஹசாரேயின் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவாக பிலிம் சேம்பர் வளாகத்தில் பெருந்திரளான தமிழ்த் திரைப்படப் பட பிரமுகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர் கேயார், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்,சேரன், பார்த்திபன் நடிகர்கள் சூர்யா, அர்ஜுன் நடிகைகள் ரோகினி, சோனா உட்படப் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்த்திரையுலகின் பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்
அன்னா ஹசாரே யின் போராட்டாத்திற்கு ரஜினிக்க்காந்தும் தன்னுடையா ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த்திரையுலகம் ஊழல் மற்றும் கருப்புப்பணம் பதுக்கல் போன்ற சமூகத்தைச் சீரழிக்கும் விஷய்ங்களுக்கு எதிராகக் கடந்த 25 வருடங்களாகத் தமது படைப்புகள் மூலமாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எஸ்.ஏ.ச்ந்திரசேகரின் பெரும்பாலான படங்கள் இயக்குனர் சங்கரின் முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா, நடிகர் அர்ஜூனின் ஜெய்ஹிந்த் போன்றவை குறிபிடத்தக்கவை.
[nggallery id=323]