ஒரே ஒரு வெற்றிதான், அது கதா நாயகனை தானாகவே சிகரத்திற்கு நகர்த்திக் கொண்டுபோய் விடும். ராம் தந்த திருப்புமுனையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் MA, ஈ இன்று மிகப்பெரிய வெற்றிப்படமான கோ வினைக் கொடுத்திருக்கிறார் ஜீவா.
தமிழ் சினிமா உலகில் மற்றுமொரு கிளாசிக் இயக்குனர் என்று அறியப்படும் கெளதம் வாசுதேவமேனன் இந்த முறை ஜீவா வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதோ டைட்டிலே கிளாசிக்காக “நீதானே என் பொன்வசந்தம்” . இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பர டிசைன்கள் தான் இன்றைய டாக் ஆப் தி கோடம்பாக்கம். 21 வயது பொறியியல் கல்லூரி மாணவனாக ஜீவாவும், சைக்காலஜி படிக்கும் 19 வயது கல்லூரித் தேவதையாக சமந்தாவும் ஒரு அட்டகாசமான ரொமாண்டிக் காதலுக்குத் தயாராகி விட்டார்கள். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சந்தானம் பட்டையைக் கிளப்ப உள்ளார்.
MS பிரபு கேமராவைக் கையாள, ராஜீவனின் கலை வண்ணத்திலும், நளினி ஸ்ரீராமின் உடை வண்ணத்திலும் உருவாகும் நீ தானே என் பொன்வசந்தத்தை கெளதம் வாசுதேவமேனனின் போட்டான் கத்தாஸுடன் இணைந்து அவரது நண்பர்கள் குமார்-ஜெயராமின் RS Infotainment உம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புச் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.

