7 ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசனிடம் “நடிப்போடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இசையமைக்கவும் வேண்டும்” என்கிற கோரிக்கையினை வைத்த ஹாரிஸ் ஜெயராஜ், “உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஸ்ருதிஹாசனின் இசை மிகவும் அருமையாக இருந்தது. அவரது இசை, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது இசைமட்டுமல்லாது, அவருக்கு இயற்கையிலேயே நல்ல குரல் வளமும் உள்ளது. ஸ்ருதிஹாசன் பன்முகத்திறமை பெற்றவர்.
"வாரணம் ஆயிரம்" படத்தில் அவர் பாடிய அடியே கொல்லுதே... என்ற பாடலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.
இந்தியாவில் உள்ள தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல..” என்று கூறினார்.
7 ஆம் அறிவு திரைப்படத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “எல்லே லமா...” என்கிற பாடலை விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் ஷாலினியுடன் சேர்ந்து ஸ்ருதிஹாசனும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.