பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலுகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் தங்களது குழந்தைகளுடன் தீக்குளித்த இசக்கிமுத்து- சுப்புலட்சுமி தம்பதிகளின் கதறலை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது.
கடன்வாங்கி ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேறிவிடமாட்டோமா..? என்கிற யோசனையில், கந்துவட்டி மாஃபியாக்களிடம் மாட்டிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா போராட்டம் தான்.
அப்படிப்பட்ட பிரச்சினையை மையமாக வைத்து சீயோன் இயக்கியுள்ள படம் தான் பொது நலன் கருதி.
படத்தைப் பற்றி மேலும் விவரித்த இயக்குநர்,
இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரினிலே என்பது போல, சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம், எதையாவது செய்து முன்னுக்கு வரமுடியாதா..?/ எனத்துடிக்கும் இளைஞர்கள், பணம் திரும்பி வரத்தாமதமானாலே வட்டிக்குக்.குட்டி போட்டு அவர்களின் ரத்தத்தை உறிஞசும் கந்துவட்டி மாஃபியாக்கள் , அந்த கொடூர மாஃபியாக்கள் சின்னாபின்னமாகும் ஏழைகளின் வாழ்க்கை போன்றவற்றை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கின்றேன்.
படம் வெளியான பின் எனக்கு அச்சுறுத்தல் வரும்.அதற்குப் பயந்து உண்மையைச் சொல்லாமல் இருக்கமுடியாது.
என்றார்.
கருணாகரன், சந்தோஷ, அருண் ஆதித் இவர்கள் கதையின் நாயககர்களாகவும் சுபிக்ஷா, அனுசித்திரா, லிசா நாயகிகளாகவும் இவர்களுட இமான் அண்ணாச்சி, யோக்ஜேப்பி, முத்துராமன், ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹரிகணேஷ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை, AVR Productions அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார்.