கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படமாக "இமைக்கா நொடிகள்" படத்தை இயக்கியிருக்கிறார், அஜய் ஞானமுத்து . நயன் தாராவின் காதல் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னணி இசையில் செதுக்கிக் கொண்டிருக்கும் இந்தப்படம், ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது.
இமைக்கா நொடிகள் படத்தில் வரும் ஒரு முக்கியமான சைக்கிள் சண்டைக்காட்சிக்காக ஹாங்காங்கில் இருந்து சைக்கிள்கள் மற்றும் சண்டைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். 12 வது மாடியில் இருந்து குதித்து குதித்து வரும் காட்சியில் அதர்வா துணிச்சலாக நடித்திருக்கிறார் என்றார் ஸ்டன் சிவா.
இந்த படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம், கதைக்குள் நம்மை கட்டிப்போடும் பல விஷயங்கள் இருக்கின்றன. புதுமையான விஷயங்களைத் தேடுவது என்கிற இயக்குநரின் தேடல் பெரியது. இது என்னுடைய 24வது படம், படத்தின் பூஜை போடுவதற்கு முன்பே முழுமையாக திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிவிட்டோம். 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடிய படம் தான், ஆனாலும், தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம் கூட கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இயக்குநரின் வித்தையை இதில் ரசிகர்கள் உணர்வார்கள் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.