ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற சல்மான்கான் நடித்த தபாங் தமிழில் STR நடிப்பில் தில்லான கில்லி மாதிரி தூள் கிளப்பும் இயக்குனர் தரணியின் இயக்கத்தில் ஒஸ்தியாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 90 நாட்கள் இரவு பகலாக நடந்த ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளில் இருக்கிறது.
அதற்கு முன்னதாக ஒஸ்தி அணியினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். ஹிந்த தபாங்கில் இறுதிக்காட்சியில் சல்மான் கான் சட்டையைக் கழட்டி தன் சிக்ஸ்பேக் உடம்புடன் நடிப்பது போன்ற காட்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில் ஒஸ்தியில் சிம்புவும் சிக்ஸ்பேக் காட்டுவார் என்று பல பத்திரிக்கைகளில் அனஃபிஷயலாகச் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து STR இன் ரசிகர்கள் அவரைத் தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்க ஆரம்பிக்க படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 நாட்கள் முடிந்த நிலையில் அப்படித் திரியைக் கொளுத்திப்போட்ட பத்திரிக்கையாளர்கள் மீது STR கோபப்பட ஆரம்பித்திருக்கிறார். அதற்குப் பின் அவருக்கு வேறு வழிதெரியவில்லை 30 நாட்களில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கடினப் பயிற்சியினை மேற்கொண்டு சிக்ஸ்பேக் கொண்டுவந்திருக்கிறார். அதன் பிறகு ஃபிட்ட்டாகவும் மிகவும் ஆக்டிவாகவும் இருப்பதாகவும் அந்த நிலை தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் பத்திரிக்கையாளர்கள் மீது முன்பு வந்த கோபம் இன்று நன்றி யாக மாறிப்போனது என்று STR தெரிவித்தார்.
தமனை இசையமைப்பாளராகப் போடுமாறு யுவன் தான் STR க்கு சிபாரிசு செய்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பட்டையையைக் கிளப்பும் பாடல்களை தந்திருக்கிறார் தமன்.
தரணியின் கில்லியில் வந்த அப்படிப்போடு போடு...பாடல் மும்பை ஏரியாக்களில் இன்னமும் சக்கைப்போடு போடுவதாகத் தெரிவித்த ரிலையன்ஸ் தலைமை அதிகாரி மகேஷ் சுவாமி நாதன் ஒஸ்தி படத்தை தமிழகம்மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் திரையிடப்போவதாகத் தெரிவித்தார்.
ஜித்தன் ரமேஷ் இதில் STR இன் தம்பியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாசர்,ரேவதி மற்றும் மயில்சாமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். தசாவதாரத்திற்குப் பிறகு ஒஸ்தியான ஐட்டம் சாங் நடிகை மல்லிகா ஷெராவத்தும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவருக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்கும் பாடல் ஒரு முக்கிய அம்சமாக ஒஸ்தியில் இடம்பெற்றிருக்கிறது.
நவம்பரில் ஒஸ்தி உலக சினிமா ரசிகர்களுக்காக வெளிவர இருக்கிறது.
-Vijay Anandh.K
Enjoy Osthe movie gallery at http://www.mysixer.com/?p=13856
Enjoy Osthe Audio Launch gallery at http://www.mysixer.com/?p=13903