தனது ரசிகர்கர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றிய இந்தியாவின் முதல் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். கம்ல்ஹாசன் அவரது உடலையே தானமாக எழுதி வைத்திருப்பது நினைவில் இருக்கலாம். கமல் ரசிகர்களின் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானங்கள் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொத்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. நவம்பர் மாதம் வந்தாலே அவரது ரசிகர்கள் இன்னொரு தீபாவளிப் பண்டிகை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். நவம்பர் 7 அன்று கமல்ஹாசனின் தந்தையார் சீனிவாசன் மறைந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் நவம்பர் 6 ஆம் தேதியே கமல்ஹாசனது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வர். இன்று நவம்பர் 4, கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழாக்களை நவம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடத்த கமல்ஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரத்த தானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் வருகிற நவம்பர், 6, 7 அன்று சென்னையில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெறும் விழாக்கள்.
06.11.2011, ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணிக்கு தென்சென்னை மாவட்ட நற்பணி இயக்கம் சார்பாக சாந்தோம் ஹைரோட்டில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கு ரூ.10,000/- மதிப்புள்ள மருந்து பொருட்கள் முதியோர் 100 பேருக்கு வேட்டி சேலைகள் மற்றும் காலை உணவு வழங்குதல்.
காலை 9 மணிக்கு மத்திய சென்னை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதி நற்பணி இயக்கத்தின் சார்பாக சென்னை மாநகராட்சி பள்ளி மற்றும் சமூக நலக்கூடத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 100 இயக்க தோழர்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி.
காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக இராயபுரம் PSRN அரசு மருத்துவமனைக்கு 25 கல்லூரி மாணவ மாணவிகள், 100 இயக்கத் தோழர்கள் பங்கு கொள்ளும் இரத்ததான நிகழ்ச்சி மற்றும் 7 இயக்க சகோதரர்கள் உடல் உறுப்புக்கள் தானப் பத்திரம் வழங்குதல். சென்னை இராயபுரம் உதவும் கைகள் அமைப்பிற்கு ஒருமாத பயன்பாட்டிற்கான மளிகைப்பொருட்கள் வழங்குதல்.
காலை 11 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக பெரம்பூர் எம்.எச். ரோடு சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் சீப் மெமோரியல் குழந்தைகள் காப்பகத்திற்கு பீரோ, மளிகை பொருட்கள் காப்பக குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு வழங்குதல். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக
நடிகர் மகாநதி சங்கர் அவர்கள் பங்கு கொள்கிறார்.
மதியம் 2 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா கல்யாண மண்டபத்தில் இரத்ததானம் மற்றும் எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கான உணவு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குதல்.
மாலை 6 மணிக்கு சென்னை முடிச்சூரில் புதிய கிளை இயக்கம் திறப்புவிழா மற்றும் தாம்பரம், குட்லைப் அனாதை இல்லத்திற்கு உணவு வழங்குதல்.
07.11.2011, திங்கட்கிழமை
காலை 8 மணிக்கு திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட இயக்கத்தின் சார்பாக எஸ்.பி. அன்னபூர்ணா திருமண மண்டபத்தில் 50 ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை, 50 பெண்களுக்கு புடவைகள் மற்றும் மகாலட்சுமி ஆசிரமத்திற்கு 1 மாதத்திற்கான உணவுப்பொருட்கள் வழங்குதல்
மாலை 6 மணிக்கு வடசென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் நடைபெறும் நற்பணி விழாவில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், 58 பேருக்கு வேட்டி சேலை வழங்குதல்.
மேற்காணும் விழாக்கள் அனைத்திலும் மாநில பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு கலந்துகொண்டு நலஉதவிகள் வழங்க உள்ளார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். ரமேஷ், எ. பஷீர், டி.விஸ்வநாதன், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சங்கர், டாக்டர்.எஸ். ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, பரமன், திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட இயக்க நிர்வாகிகள் எ. பாபு, பி. ரூபலிங்கம், டி.ராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Happy Birthday in Advance Kamalhaasan ji – Vijay Anandh.K, www.mysixer.com