காதலில் சிறப்பைச் சொல்லும் அலேகா என்கிற படத்தில் நடித்துவருகிறார் , ஆரி. அய்யனார் படத்தை இயக்கிய எஸ் எஸ் ராஜமித்ரன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடந்துவருகிறது. நேற்று ஆரியின் பிறந்த நாள் என்பதை அறிந்த படக்குழுவினர், ஆரிக்குத் தெரியாமல் ஐந்து கிலோ பிறந்த நாள் கேக் செய்து வைத்திருக்கிறார்கள் இயற்கை உணவு ஆர்வலரான ஆரி, அந்தக் கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதைத் தவிர்த்துவிட்டு, அன்றைய தினம் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் இள நீர் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார்.
அலேகா படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் உம் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தனும் இணைந்து தயாரிக்கிறார்கள். யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் எழுதும் பாடல்களுக்கு இசையமைக்கிறார் சத்யா. தில்ராஜ், ஒளிப்பதிவு செய்கிறார்.