பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ். ரமேஷ் .பி. பிள்ளை, தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படமொன்றையும் தொடங்கியுள்ளார்கள்.
சி.சத்யா இசையமைக்கவிருக்கும் இந்தப்படத்தின் தொடக்க விழா, மிகவும் எளிமையாக நடைபெற்றது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.
எழிலில் வழக்கமான ஜனரஞ்சக பாணியில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.