சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கமலக்கணணான நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கண்ணே கலைமானே அனுபவத்தைப் பற்றிச் சொன்ன போது, “ எல்லாப்படங்களையும்.முடித்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் அப்படி இப்படி.என்று பேசியிருக்கிறேன். இந்தப்படத்தில் உண்மை.மட்டும்.தான் பேசப்போகிறேன்.. அந்த அளவிற்குச் சிறப்பான படமாக வந்திருக்கிறது.
3 மணி நேரபடத்தை மிகவும் சரியாக எடிட்டிங் செய்து குறைத்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.
டைரக்டர் ரெடின்னு சொன்னவுடனே நான் கேமரா முன் சென்றுவிடுவேன். ஆனால், ஒளிப்பதிவாளர் ஜலந்தர் கூப்பிட்டு , கேமரா ரெடியாக கொஞ்சம் டைம் கொடுங்க என்பார்.
விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு பள்ளிக்கூடத்தை வங்கியாக மாற்றியிருக்கிறோம். எது நிஜம் எது செயற்கை என்று தெரியாத அளவிற்கு இருக்கும்.
என்னுடைய பால்ய சினேகதியாக தேங்காய் கடை முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் வசுந்த்ரா நடித்திருக்கிறார்.
பாரதி என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார், தமன்னா, என்னுடன் சேர்ந்து தொடர்ந்து நடிக்கிறாரோ இல்லையோ சீனு ராமசாமி படத்தில் தொடர்ந்து நடிக்கவேண்டும். மேக் அப்பே இல்லாமல் தமன்னா நடித்தார். அவருடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்.
வடிவுக்கரசி அம்மாவுடன் கிளைமாக்ஸ் காட்சியில் உண்மையான பாட்டியும் பேரனும் எப்படி உணர்ச்சிகளைக் கொட்டுவார்களோ அப்படி நடித்தோம். அவர்களிடம் நிறையக் கற்றுக் கொண்டு நடித்தேன்..
இந்தப்படத்தின் வெற்றி தோல்வி பற்றில் கவலைப்படமாட்டேன். மறுபடியும் சீனு ராமசாமியுடன் படம் பணியாற்றுவேன்…” என்றார்.
சீனு ராமசாமி தன்னுடன் 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவரும் அருணை இந்தப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அருணுடன், விநாயக் ராஜ் மற்றும் அம்பானி சங்கர் ஆகியோரும் உதய நிதியின் நண்பர்களாக நடித்திருக்கின்றனர்.