பரியேறும் பெருமாள் படத்தின் சர்வதேச அளவிலான வெற்றியைத் தொடர்ந்து கதிர் நடிக்கும் சத் ரு படம் மார்ச் 8 வெளியாகிறது. நடுவில், கதிர் நடித்த சிகை படம் வெளியானாலும், திரையரங்குகளில் இல்லாமல் ஆன்லைனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் கதிர் இந்தப்படத்தில் துடிப்புள்ள இளம் காவல் உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராட்டினம் நாயகன் லகுபரன் வில்லனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்ரு குறித்து கூறிய அதன் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான், " நாயகன் போலீஸ் என்றாலும் இது முழுக்க முழுக்க போலீஸ் கதை இல்லை. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஐந்து முகம் தெரியாத குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கதிர் பிடிக்கிறார்...
கிரைம் திரில்லராக விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.." என்றார்.
பொன்வண்ணன், நீலிமா, ரிஷி, மாரிமுத்து, அர்ஜுன் ராம், சுஜாவாருணி கீயன், ரகுநாத், பவன், சாது, குருமூர்த்தி, பாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கபிலன், மதன்கார்க்கி மற்றும் சொற்கோ எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அம்ரீஷ். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்ய சண்டைப்பயிற்சி அமைத்திருக்கிறார், விக்கி.
RD infinity deal entertainment நிறுவனம் சார்பால ரகுகுமார் என்கிற ராஜரத்தினம் மற்றும் ஸ்ரீதரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி டில்லிபாபு, மார்ச் 8 இல் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.