இளையதிலகம் பிரபு சங்கிலி எனும் படம் மூலம் அறிமுகமாகி இன்றோடு 37 வருடங்கள் ஆகிவிட்டது. இது வரை 225 படங்களில் நடித்திருக்கிறார்.
இன்று அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் துவக்க விழா நடந்தது.
கன்னடத்தில் இரண்டு படங்களைத் தயாரித்திருக்கும் எம் ஆர் பிக்சர்ஸ் , பத்மநாபா 3வதாக தமிழில் தயாரிக்கும் இந்தப்படத்தில் பிரபுவுடன் மதுபாலா, நாசர், மனோபாலா, சாம்ஸ் மற்றும் நாயகனாக ராகுல் விஜய் நாயகியாக பிரியா வட்லமணி ஆகியோர் நடிக்கிறார்கள். புகழ்பெற்ற சண்டைப்பயிற்சியாளர் விஜயின் மகன் தான் நாயகன் ராகுல் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், பாஞ்சாலங்குறிச்சி படத்திற்குப் பிறகு 20 வருடங்கள் கழித்து மறுபடியும் பிரபு வுடன் நடிக்கவிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார் மதுபாலா. பிரபல கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் காலேஜ் குமாரை இயக்குகிறார்.
இந்தப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார் ஆர் கே வித்யாதரன். குருபிரசாத் ஒளிப்பதிவ செய்கிறார்.
ஏ ஆர் ரஹ்மானின் ஏ எம் இசைப்பள்ளியைச் சேர்ந்த நகுல், காஷிப், சந்தோஷ், பவன் என்று நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்.
பிலிம் சேம்பர் ரவி கொட்டாரக்கரா, ஏ ஆர் ரஹ்மான் இசைப்பள்ளியின் நிர்வாகியும் ஏ ஆர் ரஹ்மானின் தங்கையுமான ஃபாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலேஜ் குமார் குழுவினரை வாழ்த்தினார்.