-K Vijay Anandh
ஆண்டுக்கு 2500 கோடி வர்த்தகம் நடைபெறும் தமிழ் சினிமாவில், வருடந்தோறும் குறைந்தது 150 முதல் அதிகப்பட்சமாக 200 படங்கள் வரை வெளியாகின்றன. இதில், பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் சரி புதுமுகங்ங்கள் நடித்திருந்தாலும் சரி 10% படங்களே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகின்றன.
பட வெளியீட்டுக்குப் பிந்தைய வியாபாரங்களில் கிடைக்கும் லாபங்கள் ஒரு வருமானம் என்றால், படத்தைத் திட்டமிட்டுத் தயாரிப்பதால் மிச்சமாகும் தொகையே முதல் லாபமாகக் கருதுகிறார்கள், புத்திசாலித்தனமும் திரைத்துறை மீது அர்ப்பணிப்பும் அதை விட முக்கியமாக கால் நூற்றாண்டிற்கும் மேலான அனுபவமும் கொண்ட தயாரிப்பாளர்கள்.
சரியான கதை, அதற்கேற்ற நடிகர்கள் - தொழில் நுட்பக்கலைஞர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பது முதல் , படப்பிடிப்பைக் குறித்த நாட்களுக்குள் முடிப்பது, படத்தின் விளம்பர & வியாபாரத் தளங்கள் என்று தங்களது அனுபவத்தில் கற்றுக் கொண்ட அனைத்தையும், புதிதாகத் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, ஜே எஸ் கே பிலிம் கார்பரேஷன் சதீஷ் குமார், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி வி குமார், தயாரிப்பாளர் & நடிகர் வெங்கட் சுபா மற்றும் பொஃப்டா தனஞ்செயன் ஆகியோர்.
வரும் ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு பங்குகொள்ளும் தயாரிப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பட பூஜை முதல் சென்சார், விருது, விற்பனை வரை அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.
புதிதாகப் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் முதல் பிரதி அடிப்படையில் படங்கள் இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் இயக்குநர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, திரைப்படத் தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொண்டு திரைத்துறைக்குள் காலடி வைத்தால், நிச்சயம் தரமான அதே நேரம் வணிக ரீதியில் வெற்றிபெறக்கூடிய படங்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும்.
விபரங்களுக்கு :
90030 78000
90030 79000
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.