"பிக்பாஸ் 3 வீட்டில் சேரன் தொடர்ந்து அவமானப்படுத்தப் படுகிறார், இந்த நிலை தொடர்ந்தால், அவர் மீது அன்பு கொண்டவர்கள் ஒன்றிணைந்து அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து அவரை மீட்போம்.."/என்று வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், " இயக்குநர் சேரன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் போன்றவர். அவருடைய குடும்ப பிரச்சினை ஒன்றில் தமிழ் நாடே அவர் பக்கம் நின்றது.
சினிமாவில் சம்பாதித்து ரியல் எஸ்டேட் அது இது என்று முதலீடு செய்பவர்கள் மத்தியில் அதன் வணிகத்தை எளிமைப்படுத்த சி 2 ஹெச் என்று ஆரம்பித்து அதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளானவர்.
எனது வெங்காயம் படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது, ஒரு பார்வையாளனாக அந்தப்படத்தை ரசித்து, தனது நட்பு வட்டத்தில் உள்ள இயக்குநர் கள் தயாரிப்பாளர்களைப் பார்க்க வைத்து, எந்த விதமான பிரதிபலனும் பாராமல் படம் வெளியாக உதவினார்..
அப்படிப்பட்டவரை, என் மீது கை வைத்துவிட்டார் என்று ஒரு நடிகை அபாண்டமாகப் பழி சுமத்தி அவமானப்படுத்துகிறார் என்றால் , இன்னொரு நடிகர் வாடா போடா என்று அழைக்கவும் தயங்க மாட்டேன் என்கிறார்..
இவற்றால், சேரன் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிய விஜய்சேதுபதியே அவரை மீட்க வேண்டும் அல்லது சேரன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரை மீட்போம்.." என்றார்.