நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடித்திருக்கும் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் என்று ஐந்து இந்தியமொழிகளிலும் ஆங்கிலத்திலுமாக 6 மொழிகளில் இந்தப்படத்தினை ஃபாக்ஸ் ஸ்டுடியோ வெளியிடுகிறது.
இன்றளவும் தகர்க்க முடியாத வசூல் சாதனை புரிந்த டெர்மினேட்டர் தொடர் படங்களின் இந்த வரவின் தமிழ் டிரையலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அர்னால்ட் Front Press எனும் உடற்பயிற்சியை நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா வுடன் இணைந்து செய்து காட்டிய ஆர்யா, “ ஜிம் Gym போகிற அனைவருக்கும் அர்னால்ட் தான் ஆதர்ச நாயகன். அப்படித் தொடர்ந்து உடற்பயிற்சியின் மீது நான் காட்டிய ஆர்வம் தான் இன்று அவரது படத்தின் டிரையலரை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறது. அவ்வளவு உயரம் இருந்து கொண்டு, ஆணழகனாகச் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் 7 முறைகள்…
ஒரு நடிகனாக மட்டுமல்ல, சிறந்த உடற்தகுதி கொண்ட நபராக அர்னால்ட் இன்னும் 100 வருடங்களுக்கு அறியப்படுவார்.
உடற்தகுதி அனைவருக்கும் முக்கியமானது தான் எனினும், நடிகராக அது எவ்வளவு முக்கியம் என்பதனை அர்னால்ட் மூலம் தான் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது பிட்னஸ் க்கும் படங்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்..” என்றார்.
Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) த்தில் ஜேம்ஸ் காமரூன் மறுபடியும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.