அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் தொடங்கியது. பூஜையில், ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தைப் பற்றி நீயூட்டன் பிரபு கூறுகையில், ”டிவி தொகுப்பாளர் தணிகையும் , அறிமுக நடிகை குயின்ஸ்லி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படம் ரொமாண்டிக் சைக்கோ திரில்லராக உருவாகவுள்ளது. வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றங்களிலுமாக பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்…” என்றார்.
நியூட்டன் பிரபு, பல படங்களில் துணை மற்றும் இணை இயக்கு நராகப் பணியாற்றியிருப்பதோடு, சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒலி அமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கிடைத்த நட்புகளை ஒருங்கிணைத்து, இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சம்சத் ஒளிப்பதிவாளராகவும் மலையாள வரவான சித்தார்த்தா பிரதீப் இசை அமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளார்கள்.