வால்ட் டிஸ்னியின் ஃப்ரோஷன் படத்த்தின் இரண்டாம் பாகம், வரும் நவம்பர் 22 இல் தமிழ், தெலுங்கு,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது. லயன் கிங் படத்தினைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கும் தமிழ்த்திரைப் பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் பாடலாசிரியரான விவேக், இந்தப்படத்திற்கான தமிழ் வசனங்களை எழுதியிருப்பதன் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்னாவிற்கு குரல் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாலர் என்று அறியப்படுபவரும் நடிகையுமான திவ்ய தர்ஷினி, “டிஸ்னியில் இருந்து இந்தப்படத்திற்காகக் குரல் கொடுக்கமுடியுமா என்று கேட்டது முதல் நான் உற்சாகத்தில் மிதந்தேன். சிறு வயதில் மிகவும் விரும்பிப் பார்த்துப் பின் மறந்தே போய்விட்ட அந்த இளவரசிக்கு நான் குரல் கொடுக்கப்போகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை… அதிலும் ராஜகுமாரி கதைகளில் என்னையே நான் கற்பனை செய்துகொள்ளுவேன்.. எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள். ஆனால், இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள், அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது. இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது…” என்றார்.
படத்தின் நாயகி எல்ஷாவிற்கு பின்னணி பேசியுள்ள ஸ்ருதிஹாசன், “ப்ரோஷன் படம் உலகெங்கிலும் பெரும் வெற்றிபெறக் காரணம் பல பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக , முன்னுதரணாமக இருப்பது தான். இந்த கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்த அனுவம் அலாதியானது. மிகவும் எளிமையாக என்னை பிரதிபலிப்பதாக இருந்தது. என் தங்கை அக்ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவு இப்படத்தில் பணிபுரிவதில் பேருதவியாக இருந்தது. திவ்ய தர்ஷினி ஆன்னா பாத்திரத்திற்கு அற்புதமாகக் குரல்கொடுத்திருந்தார். அவர் அப்படி குரல் கொடுத்திருந்தது, என்னை இன்னும் சிறப்பாக எனது கதாபாத்திரத்திற்குள் ஒன்றச் செய்தது. பாடலாசிரியர் விவேக் படத்திற்கு பொருத்தமான அருமையான வசனங்கள் தந்திருந்தார். வழக்கமாய் என் படங்களுக்கு நான் இரண்டு நாட்களில் டப்பிங் பேசுவேன். ஃப்ரோஷன் 2வை ஒரே நாளில் பேசிவிட்டேன்..” என்றார்.
நாயகி எல்ஷாவிற்குக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், படத்தில் வரும் பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார் இந்தப் பன்முகத்திறமைசாலி ஸ்ருதிஹாசன்.
மேடையில், ஸ்ருதிஹாசனின் குரலை திவ்யதர்ஷினியும், டி டி யை ஸ்ருதியும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.