ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்' பற்றிய அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் இது சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் என்பது மட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வருவதும் தான். பிரேக்கிங் நியூஸ் படத்தில், சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும், நூறு நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகள், வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகளாக இல்லாமல்,. நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி உருவாக்கப்பட்டு இதுவரை பார்த்திராத விஷுவல் விருந்தளிக்கும் படமாக அமைந்திருக்கிறது.
சாத்தியமில்லாதவைகளைச் சாத்தியமாக்கும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம், விஷுவல் விருந்தாகவே பிரேக்கிங் நியுஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார். வெங்கட் பிரபு-சரண் நடித்த ஞாபகம் வருதே, விஜய் வசந்த் நடித்த ஜிகினா ஆகிய படங்களைத் தயாரித்தவர் திருக்கடல் உதயம்.
விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன், கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கதாநாயகியாக பானு நடிக்க, ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்திருக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பாலிவுட் புகழ் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார். ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ராதிகா நடனக் காட்சிகளை அமைக்க, கலை இயக்குநராகப் பணியற்றுகிறார் என்.எம்.மகேஷ். விஷுவல் எபக்ட்ஸ் தொழில் நுட்பக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தினேஷ் குமார்.