மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்க, அவரது பள்ளிகாலத் தோழன் மணிமாறன் இயக்கியிருக்கும் படம் சங்கத்தலைவன். உதயகுமார் தயாரித்து, சமுத்திரக்கனி கதாநாயகனாகவும் அவரது ஜோடியாக ரம்யாவும் நடித்திருக்கும் இப்படத்தின் இசை இன்று வெளியானது. ஜீவி பிரகாஷ் குமாரிடம் பல படங்களுக்கு உதவி இசையமைப்பாளராக இருந்த ராபர்ட் சற்குணம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விசைதறிக்கூடங்களில் பணியாற்றியவரும் எழுத்தாளருமான பாரதி நாதனின் தறி என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் மீரா கதிரவன், சுப்ரமணிய சிவா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குரு நாதர் ஜீவி பிரகாஷுக்கும், வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறனுக்கும் நன்றியும் தெரிவித்ததுடன் “உரிமையை விட உயிரா பெரிது..?” என்கிற ஒற்றை வரியைச் சொல்லி அழுத்தமான தனது கன்னி உரையைப் பதிவு செய்தார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம்.
“இதுவரை நகரப்பின்னணியிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நான், இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். எனது நடிப்பு பயணம் இப்படத்தில் இருந்துதான் நிஜமாகவே துவங்குவதாக உணர்கிறேன்… ராக்கிகட்டி மகிழ்ந்த உடன் பிறவா சகோதரனான சமுத்திரக்கனியுடன் ஜோடியாக நடித்தது சுவராஸ்யமான முரண்..” என்றார் ரம்யா.
” எம் எல் ஏ வாக சட்டசபைக்குள் சென்றால், அங்கே நம்மளை விடச் சிறப்பாக அனைவரும் நடிக்கிறார்கள். சரி, நமக்குத் தெரிந்த தொழிலான நடிப்புக்கே வந்துவிடுவோம் என்று முடிவெடுத்து திரும்பவும் நடிக்க வந்துவிட்டேன். நாளை 50 வது பிறந்த நாள் கொண்டாடும் எனக்கு சங்கத்தலைவன் ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது.” என்றார் கருணாஸ் எம் எல் ஏ. அப்போ, எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவீர்களா ஐயா..?
சமுத்திரக்கனி பேசிய பொழுது, “ இப்பொழுது அம்மாவுக்கு போன்செய்தாலும் பக்கத்தில் தறி சத்தம் கேட்கும். என் சிறிய வயதில் என் மாமா ராமசாமி தான் எனக்கு ஹீரோ. நல்ல மனிதர், ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் தனியாளாக தைரியமாக முன்னாடி நின்று தீர்த்து வைப்பார். அவருடன் சேர்ந்தாலே வில்லங்கம் என்று ஊரே ஒதுங்கி நின்ற போதிலும்.
சங்கத்தலைவனில் என்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் அவரைத் தான் பிரதிபலித்திருப்பதாக உணர்கிறேன்… நாடோடிகள் படத்தில் கைத்தறியைப் பின்னணியில் காட்டியிருப்பேன். இந்தப்படத்தில் முழுமையான கதைக்களமாக விசைத்தறி அமைந்திருப்பதிலும் அதில் நான் நடித்திருப்பதிலும் மகிழ்ச்சி..” என்றார்.
“இப்படத்தின் கதையை கருணாஸிடம் சொன்னபோது காமெடியாகச் சொன்னேன்.. சமுத்திரக்கனியிடம் சொன்னபோது சீரியஸாகச் சொன்னேன்… ஒரே படத்தின் கதையை இருவேறுவிதமாகச் சொல்வது புது அனுபவமாக இருந்தது… ஆனால், சினிமாத்தனங்கள் அதிகமில்லாமல், படம் அழுத்தமாகவே பதிவு
முதுபெரும் கம்யூனிச தலைவர், பெரும்பணக்காரர் சிங்காரவேலர் போன்ற ஆகச்சிறந்த தலைவர்களின் குடும்பங்கள் இன்று மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கே எதுவும் செய்யாத கம்யூனிஸ்டுகள் சமூகத்திற்கு என்ன செய்துவிடப்போகிறார்கள் என்கிற ரீதியில் கம்யூனிசத்தின் கையாலாகாத தனத்தைச் சுட்டிக் காட்டி, கூடியிருந்த ஒன்றிரண்டு கம்யூனிஸ்டுகளைக் கதறவிட்டார் சுப்பிரமணிய சிவா.