சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வமுள்ள உள்ள ஒரு சில தமிழ் நடிகையருள் முன்னணியில் இருப்பவர் தன்ஷிகா.
ஆனந்த் மூர்த்தி இயக்கியுள்ள சினம் என்கிற குறும்படத்தில் 16 நிமிடங்கள் கட்டே cut இல்லாத காட்சியாக ஒரே ஷாட்டில் பேசவேண்டிய வசனங்களையும் பேசி காட்டவேண்டிய உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தி நடித்து அசத்தியிருக்கிறார்.
ஆணவக்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தக் குறும்படத்தில், தங்களை விடத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனின் கை தன் மகள் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக தன்ஷிகாவின் காதலனைக் கொலை செய்துவிடுகிறார் அவரது தந்தை. ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் கை தானே படக்கூடாது, இந்த பார்ரா ஊரில் இருக்கும் அத்தனை சாதிக்காரன் கையும் எம்மேல படுது என்று சொல்கிற விலைமாதுவாகப் பதிலடி கொடுக்கிறார் தன்ஷிகா.
இது தவறான முன்னுதாரணம் இல்லையா..? என்று கேட்டதற்கு, “ நான் நடிக்கும் இடத்தில் இருக்கிறேன். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர். தந்தையைப் பழிவாங்கவே அப்படி அந்த கதாபாத்திரம் செய்ததே ஒழிய, விலைமாதர் தொழிலை விரும்பி அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தனது உடலையும் தான் வெறுக்கிறாள்..” என்றார் தன்ஷிகா.