கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் , கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம் 'லேபர்' . குடிகாரர்களால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதையும்., கூடவே , திருநங்கையரின் வாழ்க்கை முறையையும் இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் , பேசாத பதத்தில் பெரிய அளவில் பேசி இருக்கும் படம் தான் 'லேபர்'
இதில் கதை நாயகராக முத்து, கதை நாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் இருவருடன் ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்ரமணியன், பெரோஸ்கான், கமல்... உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளனர். 'ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ்' தயாரித்துள்ள , இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார் , நிஜில் தினகரன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து சத்தியபதி இயக்கியுள்ளார்.
'லேபர்' திரைப்படத்திற்கு சமீபமாக ட்ரைலர் வெளியீட்டு விழா தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி கே.ராஜன் தலைமையில் சென்னை, சாவி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது., இயக்குநர் சங்க பிரதிநிதிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு திருமலை உள்ளிட்டோர்., கலந்து கொண்ட ' லேபர்' திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ., இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் கதாநாயகி , உடன் இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளியைப் பார்த்து "எனக்கு நீ இந்தி கற்றுத்தருகிறாயா .?!' என கேட்பது போன்று வரும் வசனத்தால்... இந்த படம் தமிழர்களை இந்தி கற்று கொள்ளவும் சொல்கிறதோ .?! " என்கிற ஆரோக்கியமான விவாதத்தை முன் வைத்திருக்கிறது.
இந்த நிலையில் பிஜேபி பிரபலமும் நடிகையுமான காயத்ரி ரகுராமும், திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' பட இயக்குனர் மோகன்.ஜியும் இப்பட ட்ரைலரை ரீ-டுவிட் செய்து இருப்பது, இந்தி எதிர்ப்பு என்கிற ஒரே அஸ்திரத்துடன் தமிழர்களை தேசிய நீரோடையில் இணைய விடாமல் தடுத்து அரசியல் செய்துகொண்டிருப்பவர்களை பீதியடைய வைத்திருக்கிறது.
எனக்கு ஹிந்தி கற்றுக்கொடுப்பியா..? என்கிற ஒற்றை கேள்வியில் , தமிழகத்தில் இருக்கும் இந்தி எதிர்ப்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்த லேபர் பட டிரையலரைக்காண... இந்த லிங்கில் செல்லுங்கள்.
இப்படி , சர்ச்சைகளுடன் கூடிய எதிர்பார்ப்புகளுடன் வரும் டிசம்பர் - 31ம் தேதி இந்த வருடத்தின் கடைசி நாளில் திரைக்கு வர இருக்கிறது 'லேபர்'.