ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான யானை பட பாடல்கள் ஜனவரி 13 இல் வெளியாகிறது.
வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது .பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி யானை பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.
இராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.
அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.