OTT தளங்கள் அறிமுகமாகி இவை வாடிக்கையாளர்களை வசீகரிக்குமா.? என்கிற சந்தேகங்கள் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால், அதைத்தொடர்ந்து.வந்த கொரானா OTT தளங்களை மக்கள் மத்தியில் அழுத்தமாகவே பதிய வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.
திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்ட பொது முடக்கத்தில் மக்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் முடங்கிப்போய்விடாமல் காத்த கபசுர குடிநீர போன்ற OTT தளங்களும், அளவில்லாத படைப்புகளை வழங்கி புத்துணர்ச்சி தந்ததன.
அந்த வகையில், OTT தளங்களின் வரவு நல்வரவாகிப்போனது என்றே சொல்லவேண்டும். இந்த நல்ல வேளையில் தமிழர் திருநாளான பொங்கல் திரு நாளை முன்னிட்டு ஜனவரி 15 முதல் தித்திக்கும் சர்க்கரை பொங்கல் போல திகட்ட திகட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் வருகிறது theaterhoods.com OTT.
இது குறித்து நம்மிடையே பேசிய இந்திய மண்டல மார்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன், " ஒரு இந்தியனாக உலகளவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் இந்திய படைப்புகளை நினைத்து பெருமைப்படுகிறேன். தியேட்டர்ஹுட்ஸ் , 5000 க்கும் மேற்பட்ட இந்திய படைப்புகள் 1000 க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தயாரிப்புகள் மற்றும் பல்வேறு கதைக்களங்களுடனான தொடர்கள் ஆகியவற்றை வழங்கவுள்ளது.
மேலும், OTT யில் வெளியாகும் படைப்புகளை பார்த்து ரசிக்கும் கால தாமதத்தை தவிர்க்க அதன் சந்தாதாரர்களுக்கு திரையரங்குகளில் பார்த்து மகிழ ஏதுவாக இலவச டிக்கெட்டுகளை வழங்க இருக்கிறது.
அத்துடன் திரைப்படங்களின் விளம்பரங்களை இலவசமாக OTT தளத்தில் வழஙகும் திட்டமும் உள்ளது. திரைப்படைப்பாளிகள் இது குறித்து எங்களை content@theaterhoods.com மின்னஞ்சல் மூலம் அணுகலாம்." என்றார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து இந்திய மொழிகள் உருவான படைப்புகளை அனைத்து உலக நாடுகளிலும் இருந்து ரசிகர்கள் பார்த்து மகிழ முடியும்.