கடந்த வாரம் தெலுங்கு திரையுலகின் கிங்மேக்கர் என்று அறியப்படும் அல்லு அரவிந்த், முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்கான OTT தளமாக ஆஹா 100% தளத்தை அறிமுகம் செய்தார்.
நாளொன்றுக்கு 1 ரூ என்கிற அளவில் வருடத்திற்கு 365 ரூ யில் புத்தம் புது தமிழ்த்திரைப்படங்கள், இணைய தொடர்கள் உள்ளிட்ட எண்ணிலடங்கா பொழுதுபோக்கு அம்சங்களை தமிழில் பார்த்து மகிழலாம்.
அந்த வகையில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் OTT படைப்பாக இரை என்கிற இணைய தொடர், ஆஹா தளத்தில் வெளியானது.
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவான இத்தொடர், சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ச்சனா சரத் எழுதிய Birds of Prey எனும் கிரைம் நாவலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சரத்குமார், புலனாய்வு அதிகாரியாக வரும் இத்தொடரில் சக காவல்துறை அதிகாரியாக நிழல்கள் ரவி, இளம் SP ஆக ஸ்ரீஷா, காவலராக கருப்பு நம்பியார், அரசியல்வாதியாக அபிஷேக் சங்கர் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளரி நாயர் நடித்திருக்கின்றனர்.
ரடான் மீடியா சார்பாக ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இத்தொடரின் அறிமுக நிகழ்வில் இயக்குநர்கள் விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் , ஆஹா சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விக்ரமன், “OTT தளத்தில் வெளியான படங்கள் இன்று ஒரு சில திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றன. இது ஆரோக்கியமான விஷயம். பரபரப்பான இந்த தொடரும் தி திரையரங்கிலும் வெளியாகலாம்..” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, “ 13 வயதில் நான் நாயகியாக நடித்த கிழக்கே போகும் ரயில் படத்தின் வெற்றிவிழாவும், சரத்குமாரின் சூர்ய வம்சம் படத்தின் வெற்றிவிழாவும் நடந்த அதே கமலா திரையரங்கில், சரத்குமாரின் முதல் இணைய தொடர் அறிமுகமாவதில் மகிழ்ச்சி.
பெரிய திரையில் நடிப்பது போல் அல்லாமல், OTT தளத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் சிரத்தை எடுத்து சரத்குமார் நடித்திருக்கிறார் ..” என்றார்.
சரத்குமாரின் மகள் பூஜா சரத் குமார், இத்தொடர் மூலம் EP ஆக அறிமுகமாகிறார்.
இரை, ஆஹா 100% தமிழில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ...