கோகோ மாகோ, இந்த நிலை மாறும், ஆபரேஷன் ஜுஜுபி ஆகிய படங்களை இயக்கியவர் அருண்காந்த். கோயமுத்தூரைச் சேர்ந்த இந்த சுயாதீன படைப்பாளி Independent Film Maker , தனது படைப்புகளை திரையரங்குகளில் திரையிட்டதுடன், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்று சேரும் விதமாக பிரத்யேகமாக AK Online எனும் OTT தளத்தை உருவாக்கி தனது படைப்புகளை மிகவும் குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
இது குறித்து அருண்காந்த் மேலும் கூறும் போது, “AK Online OTT தளம் எனது படைப்புகளுக்கானது மட்டுமல்ல, என்னைப்போன்ற Independent Film Makers க்கான தளம். கோலிவுட் முதல் பாலிவுட் ஆகியவற்றிற்கு வெளியே குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புகளை என்னைப்போன்ற பல Independent Film Makers எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது படைப்புகளை வெளியிட பெரும்பாலான திரையரங்குகளோ அல்லது OTT தளங்களோ முன்வருவதில்லை. அக்குறையை போக்கும் விதமாக AK Online OTT தளத்தை ஆரம்பித்திருக்கின்றேன்..” என்றார்.
மேலும், இளம் படைப்பாளிகளை உருவாக்கும் விதமாக 1 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய 100 நகைச்சுவை குறும்படங்களை தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார்.
ஒரு நிமிடத்திற்குள் ஒரு நகைச்சுவை படைப்பை இயக்கும் ஆர்வமுள்ள இயக்குநர்கள் தங்களது படைப்புகள் & விண்ணப்பங்களை www.akonline.app வழியாக அனுப்பலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளை அருண்காந்தே தயாரிக்கிறார். அந்தப்படைப்புகள் AK online OTT தளத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும்.