விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'. ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கும் நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். அமீர்கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 23 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரின் குரு மூத்த இயக்குனர் SAC வெளியிட இளையதிலகம் நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
நண்பனைப் பற்றி விஜய்,“ " நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருது. ண்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்.. சௌத்ரி சார் தயாரிச்ச சில படங்கள்ல நான் நடிச்சிருக்கேன். 'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு” என்றார்.
விஜயைப் பற்றி ஷங்கர் பேசும்போது, “ரஜினிக்கு அப்பறம் கரெக்ட் டயத்துக்கு ஷுட்டிங்குக்கு வருவது விஜய் தான் ! மொதல் நாளே மறுநாள் சீன் என்னன்னு கேட்டுகிட்டு போயிருவாரு.. மறுநாள் ஹோம் வொர்க் பண்ணிகிட்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாரு.. ரொம்ப சின்சியரான நடிகர் விஜய். விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் !" என்று குறிப்பிட்டார்.
தனது சிஷ்யனை மெச்சிய எஸ்.ஏ.சந்திரசேகர், “இன்று உலகமே திரும்பிப் பார்க்கிற என் மாணவன் ஷங்கரைப் பாராட்டுவது பெருமையா இருக்கு ! " என்று உச்சி முகர்ந்தார்.
நண்பன் வரும் 2012 பொங்கல் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
-விஜய் ஆனந்த்.K
Enjoy the photos of the event at
http://www.mysixer.com/?p=15245