வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரித்து வழங்கும் பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் அவன் இவன் ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.
வயிறு கிழியும் காமடிதான் படத்தின் களம். காஞ்சனாவில் பட்டையை கிளப்பிய கோவை சரளா ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், வெண்ணிலா கபாடிக்குழு சூரியும், அங்காடித்தெரு பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.
நடித்ததோடு மட்டுமில்லாமல் ஒரு அழகான குத்துப் பாடலை பாடியுள்ளனர்.
பாகன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஸ்ரீகாந்துக்காக
"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
அக்சுவலா பம்பருதான்
நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேலைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"
என்ற பாடலை முதல் முதலாக பாடியுள்ளனர் சூரியும், பாண்டியும்.
ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் படத்தில் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் இப்பாடலை பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.