ஓவியம் மற்றும் ஆயில்பெயிண்டிங் பற்றிப் படிக்க இரண்டரை வருடம் ஆஸ்திரேலியா சென்று விட்ட நடிகை ஷெரீன் அதில் தேறிய பிறகு மீண்டும் 'அபாயம்' படம் மூலம் பிரவேசம் செய்திருக்கிறார். இரண்டு மணி நேர படம். எப்ப ஆரம்பமானது. எப்ப முடிந்தது என்று தெரியாத அளவுக்குப் படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ணசாமி என்று சொல்லும் ஷெரீன் இந்தப் படத்திற்குப் பிறகு தனக்கு நல்ல வாய்ப்புகள் தமிழில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஓவியம் படித்து விட்டு வந்திருக்கிறீர்களே ஓவியக் கண்காட்சி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு, “இன்னும் முழுமையாக பயிற்றி எடுத்து நிறைய பெயிண்டிங் பண்ணிய பிறகு கண்காட்சி வைப்பேன்” என்று அழகாகப் பதிலளித்தது அந்த ஓவியம்.
ஷெரீனைப்பற்றி நினைத்தாலே துள்ளுவதோ இளமைதான்.
அபாயம் திரைப்படத்தினை ஜே.எஸ்.கே. பிலிம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார்.