சப்தம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் அறிவழகன், இந்தப்படத்தில் தனது முதல் பட ஹீரோ ஆதியுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.
Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.
படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்