தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரின் Einfach Studios-ன் 'கொன்றால் பாவம்' படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்- சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளனர். இந்தப் படம், 2023 கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ மோகன் பாபுவின் கன்னட நாடக கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் இதன் தெலுங்கு ரீமேக்கினை எழுதி தயாள் பத்மநாபன் இயக்கி உள்ளார். ஆஹா ஒரிஜினல்க்காக அல்லு அர்ஜூன் இதன் தெலுங்கு வெர்ஷனை தயாரித்துள்ளார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
வரலக்ஷ்மி சரத்குமார் & சந்தோஷ் பிரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மஹாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Einfach Studios -க்காக பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்க தயாள் பத்மநாபன், இணைத் தயாரிப்பாளராக D பிக்சர்ஸ்க்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மேலும், அவர் ஜான் மகேந்திரனுடன் இணைந்து படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
கான்செப்ட்: மோகன் ஹபு,
இசை & பின்னணி இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: R. செழியன்,
படத்தொகுப்பு: ப்ரீத்தி பாபு,
கலை இயக்குநர்: விதல் கோசனம்,
பாடல் வரிகள்: கபிலன், தயாள் பத்மநாபன், பட்டினத்தார்,
நடன இயக்குநர்: லீலா குமார்,
ஒலிக்கலவை: உதய் குமார்,
தயாரிப்பு நிர்வாகி: வினோத் குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D'One,
ஒப்பனை: சண்முகம்,
உடை: சக்ரி,
ஆடை வடிவமைப்பு: மீரா சித்திரப்பாவை,
விளம்பர வடிவமைப்பு: நவீன் குமார்