தமது எழுத்தாலும்,பேச்சாலும் ஆட்சிப் பீட்த்திற்குச் சென்றவர்கள் அண்ணாவும் கலைஞரும். தமது நடிப்பாலும், கொள்கை மற்றும் உயர் பண்புகளாலும் ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.
தங்களது சிறந்த பண்புகளால் 30 வருடங்களாகத் திரைத்துறையினை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் ரஜினி, கமல்.
பொது மேடைகளில் பேசும் போது இன்றைய நடிகர்கள் சர்ச்சைக்கு ஆளாகி விடுகின்றனர். வளர்ந்து வரும் அந்த கலைஞர்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மூத்த கலைஞர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். கலைஞர்கள் காலம் தாண்டி மக்கள் மத்தியில் பயணித்துக் கொண்டிருப்பதால் தன்னைத் தானே முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.
யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக சொல்லப்பட்ட கருத்து தனிப்பட்ட நடிகரை தாக்குவதாகக் திரித்து விடப்பட்டது. கலைஞர்களின் மென்மையான மனதினை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.இதே போன்ற பிரச்சினைகளை எதிர் காலத்தில் பேசித் தீர்த்துக் கொள்வோம். இன உண்ர்வு வேண்டும். அதற்காக போராட்டமோ உண்ணவிரதமோ தவையில்லை. பிறந்த மண் மீது இருக்கும் பற்றினைப்போலவே வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழவைத்துக் கொண்டிருக்கும் இடத்தின் மீது கலைஞர்கள் பற்றுக் கொள்ள வேண்டும். அந்த எண்ணம் வரவேண்டும் என்பதுதான் என்போன்றவர்கள் விருப்பம். ஆகவே இந்தப் பிரச்சினையை வளரவிடாமல் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.