
கார்த்தி நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் சிறுத்தை. இதில் முதல்முறையாக இரட்டை வேடம் ஏற்றுள்ள கார்த்தி ,ராக்கெட் ராஜா மற்றும் ரத்தினவேல்பாண்டியன் என்கிற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் ராக்கெட் ராஜா என்கிற கதாபாத்திரப்பெயருக்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இன்று தி. நகரில் உள்ள கார்த்தியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டமும் நடத்தினர். 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கதாபாத்திரப்பெயர்மாற்றப்படாது என்று கார்த்தியும் தயாரிப்பாளர் தரப்பும் எற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சினிமாத்துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், சென்சார் முடிந்து வெளியாகும் நிலையில் உள்ள திரைப்படங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் வருவது பெரும் கவலை அளிப்பதாக சினிமா தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை புரிய உள்ளனர்
.