சங்கீதம், நாடகம் , நாட்டியம் போன்ற கலைகளில் பெரும்சேவையாற்றிய மற்றும் சாதனைகள் புரிந்த கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய ஜனாதிபதியின் கரங்களால் வருடம் தோறும் டெல்லியில் உள்ள சங்கீத நாடக அகடமி ”சங்கீத நாடக அகடமி” என்ற விருதினை வழங்கி வருகிறது.
2012 க்கான சங்கீத நாடக அகடமி விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஏ ஆர் எஸ் என்று அழைக்கப்படும் ஏ ஆர் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கீத நாடக அகடமி விருது கடந்த 9.10.2012 அன்று டில்லியில் குடியரத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியின் கரங்களால் ஏ ஆர் எஸ் க்கு வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலான இவரது நடிப்புச் சேவையைக் கெளரவிக்கும் விதமாக இந்த விருதினை சங்கீத நாடக அகடமி ஏ ஆர் எஸ்ஸுக்கு வழங்கியது.
1934 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த சங்கீத நாடக அகடமி விருதுப்பட்டியலில் இதற்கு முன்பு பம்மல் சம்பந்த
முதலியார் – 1959, டிகே சண்முகம் -1962, எஸ் வி சகஸ்ர நாமம் -1968,பூர்ணம் விஸ்வநாதன் -1992 ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீத நாடக அகடமி விருது பெற்ற ஏ ஆர் எஸ்ஸினை சென்னை சாரங்கபாணி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் மேஜர்தாசன், செயலாளர் கிருஷ்ணன் குட்டி,பொருளாளர் டி ஆர் பாலேஷ்வர் ஆகியோருடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினார்கள்.