துள்ளுவதோ இளமை திரைப்படம் முலம் இன்று வரை தன்னை வழி நடத்தி,ஆதரவு நல்கி சிறந்த படைப்புகளைத் தரவைத்த பத்திரிக்கை உலகிற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தினைப் பற்றியும் திருமணத்தைப்பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
செல்வராகவனின் அடுத்த படமாக இரண்டாம் உலகம் இருக்கும்.தனுஷ்,ஆண்ட்ரியா நடிக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இந்த வருடத்தில் வெளிவரத் திட்டமிட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
செல்வராகவனின் சமீபத்திய படத்தலைப்பினைப்போலவே அவரது இரண்டாம் திருமணமும் விரைவில் நடைபெற உள்ளது.அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலி ராமனை ஜூன் 2011 ல் கைபிடிக்க இருக்கிறார். விரைவில் நிச்சயதார்த்தமும் திருமண நாளைப்பற்றிய முறையான அறிவிப்பும் வெளிவர இருக்கின்றன்.