தெலுங்கில் மகேஷ்பாபு, அனுஷ்கா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற 'கலேஜா" தமிழில் 'பத்ரா" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 'நந்து" படத்தை இயக்கிய விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார்.
ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களான ராஜஸ்தான், ஒரிசா, அசாம் ஆகியவற்றின் எல்லை வரையில் விலையுர்ந்த இரிடியம் பூமிக்கடியில் கோடிக்கணக்கான டன்கள் குவிந்துள்ளது. இதனை கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் கிராமத்து மக்களை விரட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் விஷக் கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க விடுகின்றனர் வில்லனும் அவனது கூட்டாளிகளும். காரணமே தெரியாமல் சாகும் அந்தக் கிராமத்து மக்களைக் காப்பற்ற கதாநாயகன் கிராமத்துக்கு வருகிறான். அங்கு நடக்கும் குற்றங்களைத் தடுத்து நிறுத்தி மேலும் மக்கள் யாரும் பலியாகாமல் தடுத்து இயற்கை வளங்களையும் வில்லன்களிடமிருந்து காப்பாற்றுகிறார் கதாநாயகன்.
படத்தயாரிப்பில் புதிதாக இறங்கியுள்ள குருபிரம்மா ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் பத்ரா திரைப்படத்தை தயாரித்து வருகிறது. தமிழ் ரசிகர்களைக் கவரும் விதத்தில் வசனங்களும் பாடல் வரிகளும் சுவராஸ்யமான முறையில் எழுதப்பட்டு டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Enjoy Bhadra movie stills on this link http://www.mysixer.com/?p=4055