a K Vijay Anandh review
ஒரு சாதாரண காதல் கதை என்று சொல்லிவிட்டு ஒரு அசாதாரணமான படம் ஆக்கத்தில் நம்மை திக்கு முக்காட வைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
பவிஷ் நாராயண், என்ன ஒரு அட்டகாசமான அறிமுகம். வழக்கமான தனுஷ் நாயகனாக நடிக்கும் படங்களில் இல்லாத அளவிற்கு அல்லது முற்றிலும் மாறுபட்டு, ஒரு அன்பான பண்பான முன்னுதாரணமான இளைஞனாக இந்த படத்தில் வசீகரித்து இருக்கிறார்.
படித்து முடித்தவுடன் திருமணம் அதுவும் தன் உடன் படித்தவரையே என்று ஆரம்பிக்கும் கதை, பவிஷ் நாராயண் – அனிகா சுரேந்திரன் ஆகியோரின் பிரேக் அப் ஆன காதல் கதையாக விரிகிறது.
அறிமுகப்படத்தில், ஒரு நடிகனுக்கு நல்ல கதை இருக்க வேண்டுமோ இல்லையோ நண்பர்கள் கதாபாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த படத்தில் பவிஷ் நாராயணின் நண்பர்களாக வருபவர்கள் மிகச் சிறப்பாக நடித்து படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
அனிகா சுரேந்திரன், அஜித்துடன் நடித்து பிரபலமானதால் இவருக்கும் ஒரு கெத்து கொள்கிறது. அழகும் ஆளுமையும் கூடிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு இயக்குனராக இந்த படத்தில் தனுஷ் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் நடிகைகளும் அழகு என்றால், லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கின்றது.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் வரும் பாடல்கள் அழகோ அழகு என்றால் ஆடம்பர திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் பிரியங்கா மோகனின் நடனமும் பேரழகு.
உறுதிப்படுத்தப்பட்ட திருமணங்கள் நடைபெறாமல், காதலர்களின் பிரேக் அப் ஆன காதல்கள் , மீண்டும் பேட்ச் அப் ஆக துடிக்கும் இந்த கதையை பொறுத்தவரை, இரண்டாவது பாகம் மட்டுமல்ல இன்னும் 200 பாகங்கள் கூட எடுக்கலாம் என்றால் மிகை ஆகாது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், படத்தை ஆராயக்கூடாது அனுபவிக்க வேண்டும்