ரேகை

mysixer rating 4/5

a K Vijay Anandh review

முதல் எபிசோடில் ஒரு கொலை, அடுத்தடுத்த எபிசோடுகளில் அதனை துப்புத் துலக்கி காரணங்களையும் குற்றவாளிகளையும், இறுதி எபிசோடில் கண்டுபிடிக்கும் காவல்துறை. ஒரு க்ரைம் திரில்லர் வெப் சீரிஸ்க்கு அடிப்படையான சூத்திரமே இதுதான்.

இருந்தாலும், அதையும் மீறி ரேகை கிரைம் திரில்லர் வேறொரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

ஒருவர் மூலம் இன்னொருவர் என்று நூல் பிடித்து நான்கு பேரை தேடிச் செல்லும் காவல்துறைக்கு நான்கு பேரின் மரணமே பரிசாக கிடைக்கின்றது.

ஆனால், நான்கு பேருக்கும் எப்படி ஒரே ரேகை இருக்க முடியும்…? ஒட்டிப் பிறந்த ரெட்டையர்களுக்கே சாத்தியம் இல்லாத ரேகை ஒற்றுமை எப்படி சம்பந்தமில்லாத நான்கு பேர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கிறது. ? என்கிற புள்ளியில் இருந்து புலனாய்வு வேறொரு தளத்திற்கு சென்று விடை காணுகிறது.

ராஜேஷ்குமார், பெயரைக் கேட்டாலே அனைத்தும் விலங்கும், அவர் எழுதி குவித்திருக்கும் நாவல் குவியலில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு அப்பாவி மனிதர்கள் பயன்படுத்தப்படுவது ஒரு துளியை எடுத்து, அட்டகாசமான மெடிக்கல் கிரைம் திர்லராக இந்த ரேகை வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார்,  எம் தினகரன்.

கொலைகளை புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியாக பாலா ஹாசன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நெல்லைத் தமிழில் பேசி அவருடன் காதல் வயப்படும் சக காவலராக பவித்ரா ஜனனி அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

மார்ச்சுவரி மருத்துவராக வரும் வினோதினி வைத்தியநாதன் இதுவரை இல்லாத அளவிற்கு ஆனாலும் மிகவும் இயல்பான ஒரு நடிப்பை வழங்கி அசத்தியிருக்கிறார்.

விறுவிறுப்பான வெப் சீரிஸ்க்கு தேவையான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுடன் ரேகை ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும், அவர்கள் தங்களது வீடுகளுக்குள் இருந்து பார்த்தாலும்!

ரேகை, Z5 ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

 

Comments (0)
Add Comment