கருப்பு பல்சர்

mysixer rating 3/5

a K Vijay Anandh review

இப்படி ஒரு, ரிவெஞ் திரில்லரை இவ்வளவு மெதுவாக அதே நேரம் சுவராஸ்யம் குறையாமல் கொடுக்க முடியுமா என்றால் ஆச்சரியம் தான்.

சிக்கனமாக,  நேர்மையாக, அன்பான தங்கையுடன் அழகாக எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தினேஷ். இவரது ஜோடியாக மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி கலகலப்பு ஊட்டும் ரேஷ்மா வெங்கடேஷ்.

வாடி வாசலில் எந்த காளை என்றாலும் அதனை அடக்கும் முரட்டுக்காளை ஆக, இன்னொரு தினேஷ். இந்த முரட்டுக்காளை தினேஷை கரம் பிடிக்கும் மது நிஷா .

தனது காளையை அடக்கி,  வாங்க முடியாது என்று நினைத்த கருப்பு பல்சர் பைக்கை வாங்கி விட்டானே என்கிற ஆத்திரத்தில் காளையையும், தினேஷையும் அவரது மனைவியுடன் கொன்று வில்லத்தனம் காட்டும் அர்ஜய்.

பல வருடங்களுக்குப் பிறகு பல்சர் செய்யும் வில்லத்தனங்களால் அதிர்ச்சி அடையும் மன்சூர் அலிகான் கும்பல் – அதனை பழைய விலைக்கு வாங்கிய தினேஷ் மற்றும் பிராங்ஸ்டர் ராகுல்,  பல்சருக்குள் இரண்டு ஆவிகள் ஒளிந்து இருப்பதை அறியும் சாமியார் என்று வித்தியாசமான கதை களத்தில் கருப்பு பல்சர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் முரளி கிரிஷ். எஸ்.

என்ன நடந்தது என்பதை, காவல்துறை அதிகாரியாக வரும் சரவணா சுப்பையா மூலம் வெளிப்படுத்தி இருப்பதும் நல்ல திரைக்கதை அமைப்பு.

காளையினுடைய ஆவி புகுந்த தினேஷ் கிளைமாக்சில் காளை போன்று, அர்ஜயை முட்டி தூக்கி எறிந்து துவம்சம் செய்யும் காட்சிகள் அருமை.

ஆவிகளுக்கு எது வேண்டுமானாலும் ஊடகங்களாக இருக்கலாம் என்பதால் லாஜிக் குறைபாடுகள் இன்றி இந்தப் படத்தை ரசிக்க முடிகிறது.

 

 

Comments (0)
Add Comment