விஜய் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் காட்சியிலேயே, ஹீரோயின் ஜியா காதல் தோல்வியால், ஸ்காட்லாந் மலையிலிருந்து விழுகிறார். இவரை கப்பாற்றி நாயகன் மதும்கேஷ் அவரிடம் தான் உன் காதலன் என சொல்கிறார். ஏனெனில் ஜியாக்கு அந்த விபத்தில் கடந்த 2 வருடம் நடந்தது எல்லாம் மறந்து போகிறது. அதோடு ஒரு நாள் நடப்பது தூங்கி எந்திரித்தால் முந்தைய நாள் நடந்தது எல்லாமே மறக்கிறது.
எம் எஸ் பாஸ்கர் இவர்களை தங்கள் வீட்டிலேயே தங்க வைக்க, பிறகு தான் அவருக்கே தெரிகிறது, ஹீரோயின் ஜியா காதலன் மதும்கேஷ் இல்லை. அவர் சிறு வயதிலிருந்து ஜியாவை ஒன் சைட் ஆக காதலிக்க, அவருக்கு வாழ்க்கையில் நல்லது நடக்கவே இவர் வாழ்கிறார் என்பது.
ஜியா படத்தின் நாயகியாக , விஜய் பட ஹீரோயினுக்கே உண்டான அளவான நடிப்பு, மௌனம், எமோஷ்னல் என அனைத்தையும் அழகாகவே செய்துள்ளார், சொல்ல போனால் இந்த படம் 2 ஹீரோக்கள் இருந்தாலும் ஹீரோயின் படமாகவே நகர்கிறது. பல காட்சிகளில் பையா தமன்னா போலவே இருக்கிறார்.
மதும்கேஷ், மூன்றாம் பிறை கமல்ஹாசனின் கதாபாத்திரம் போன்ற மிகவும் சவாலான கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார் . மூன்றாம் பிறை காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்திருந்தால் , படம் ஹேப்பி எண்டிங் ஆக முடிந்து தேசிய விருதுகள் கிடைக்காமல் போயிருக்கலாம்.
அசோக் அர்ஜுன் , இசைக்காக காதலியை கழட்டி விடும் வேடம் , சிறப்பாக நடித்திருக்கிறார். ஜியாவின் குரல் தான் வேண்டும் என்று நடுவர்கள் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் , அவர் ஜியாவை சந்திப்பது , அதனைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் அட்டகாசமான பொழுது போக்கு ரகம்.
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தும் எம் எஸ் பாஸ்கர், மெண்டல் டாக்டராக அறிமுகமாகி அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
இந்தப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜுக்காகவே எடுத்திருக்கிறார்கள் போல , மனிதர் நீண்ட நாட்களுக்கு பிறகு துள்ளலான இசை விருந்து படைத்திருக்கிறார்.
ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து மற்றும் கோத்தகிரி சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.
ஜியா, கிளைமாக்சில் அந்த வால் நக்ஷத்திரத்தை பார்த்து மயங்கி விழுந்து குணமாவது போல் வைத்திருக்கலாம். திரும்பவும் தலையில் அடிபட்டு குணமாவது நகைப்புக்குள்ளாகிறது.
மற்றபடி , காதல் ரீசெட் ரிப்பீட் அருமையான பொழுதுபோக்கு !