வெஞ்சன்ஸ்

Rating 4/5

– a K Vijay Anandh review

திரிஷா அல்லது நயந்தாரா நடிக்க வேண்டிய கதாபாத்திரம்,  ஆனால், இயக்க்uுஅர் ராகுல் அசோக்கின் தேர்வு அபர்னதி. அற்புதமான தேர்வு என்று நிரூபித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே புகழ்ச்சி என்கிற போதைக்கு அடிமையாகி, வளர்த்த அப்பா காளிவெங்கட்டைக் கொன்று அவரது உறுப்புகளைத்தானம் செய்து புகழ் பெறுவது முதல் ஒவ்வொன்றிலும் மிரள வைத்திருக்கிறார்.

நன்கு படித்து ஐ ஏ ஸ் ஆகி வேலைக்கு வந்தால், அரைவேக்காட்டு அரசியல்வாதிங்க கிட்ட கைகட்டி நிக்க முடியுமா ? என்ன ?  அவர்களிடமே டீல் பேசி, சம்பாதிக்கிறார்.

சிட்டிங் முதல்வர் இளவரசுவுக்கு தேர்தல் வேலை பார்க்கிறார், ஒரு கட்டத்தில் அபர்னதி யார் என்று தெரிந்து கொண்டு துகிலுரியப்படுகிறார்.

இப்படி காட்சிக்கு காட்சி, அபர்னதி ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார். அதாவது, ராகுல் அசோக்கின் கதாபாத்திரம் நம்மை ஆச்சிரியப்படுத்துகிறது.

இன்னொரு பக்கம் கிடத்தட்ட கூமுட்டை போன்ற ஒரு அரசியல்வாதியாக  லிவிங்க்ஸ்டன், அவரை ஜெயிக்க வைக்க போராடும் ஜான் ரவி, இவர்களை ஆட்டுவிக்கும் டெல்லி என்று, கடந்த 60  ஆண்டு கால தமிழக அரசியலின் சில பக்கங்களை படித்தது போல இருந்தது, வெஞ்சன்ஸ் திரைப்படம்.

தேர்தலில் ஜெயிக்க ஒரு பக்கம் ஆளுங்கட்சி அள்ளி வீசுறாய்ங்க, வீம்புக்குன்னு ஒருத்தனை ஜெயிக்க வைக்க டெல்லியும் காய் நகர்த்துது, அப்ப மக்களின் எதிர்காலம் !!

செந்தில் இருக்கும் போது பாலாஜியை ஏன் அரெஸ்ட்பண்ணாங்க..? போன்ற வசனங்கள் அடிபொலி.

வெஞ்ச்ன்ஸ் , ஐ ஏ எஸ் ஆபிசர்ஸ்ட்ட வைச்சுக்காத, நீ எவ்வளவு பெரிய அரசியல்வாதியா இருந்தாலும் என்பதாக முடிகிறது. துரந்தர் படத்தின் அடுத்த பாகத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போல இந்தப்படத்தின் அடுத்த பாகத்திற்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு படத்தை முடிக்கிறார்கள்.

 

Comments (0)
Add Comment