அனந்தன் காடு

Rating 4/5

a K Vijay Anandh review

நாலு அப்பாவிகளை அடியாட்களாக வைத்துக் கொண்டு தனக்கு தேவைப்படும் பொழுது அவர்களை குற்றம் செய்ய தூணடி செய்யாத தவறு எல்லாம் செய்ய வைத்துவிட்டு ஒரு கட்டத்தில் அவர்களது கழுத்திலேயே கையை வைக்கும் முதலமைச்சர். அதிலிருந்து அந்த நால்வரும் தப்பித்தார்களா? முதல்வர் என்ன ஆகிறார்?  என்பதே அனந்தன் காடு திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

இவர்களுக்கு நடுவே, இலங்கையில் இருந்து தப்பிச்சென்று அந்த நான்கு அப்பாவிகளிடம் அடைக்கலம் தேடும் ஒரு தமிழ் போராளி.

முதலமைச்சரின் ஏவல் துறையாக ஒரு காவல்துறை உயர் அதிகாரி, தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஒரு பெண்ணை அழைத்து சித்திரவதை செய்யும் கொடூரன்.

மிகச் சரியாக சொல்வதாக இருந்தால் இந்த ஆறு பேரையும் மையமாக வைத்து தான் மொத்த திரைக்கதையும்.

என்னதான் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தமிழில் தமிழ் படைப்பாளிகளால் கொடுக்கப்பட்டிருந்தாலும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், மலையாள எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கொஞ்சம் ஸ்பெஷல் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த அளவிற்கு மிகவும் சர்வ சாதாரணமாக மிகவும் இயல்பாக அதேசமயம் அந்த இயல்புக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத ஆக்ரோஷம் என்று அனந்தன் காடு திரைப்படத்தை அட்டகாசமான ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்.

ஒரு தமிழ் போராளியாக அந்த நான்கு மலையாள நண்பர்களின் வாழ்க்கையில் நுழையும் ஆர்யா,  இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவர்களை காப்பாற்றுகிறார். அவர்களுக்காக பழிவங்குகிறார். அவர்களது கூட்டத்தில் இருக்கும் சிறுவன் ஒருவனின் பழிவாங்குதலுக்காக ஒரு வில்லனை விட்டு வைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வசீகரமான ஆர்யாவை பார்த்து ரசிக்க முடிகிறது இந்த படத்தில்.

நான்கு மலையாள நண்பர்களாக வருபவர்கள் அத்தனை பேரும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கருப்பு திரைப்படத்தில் அப்பாவியாக நடித்திருக்கும் இந்திரன்ஸ், இந்தப் படத்தில் அதே உடல் மொழியை வைத்து கொண்டு பயமுறுத்தியும் இருக்கிறார்.

பழைய கிராமம் போன்று இருக்கும் அனந்தன் காடு, அங்கே அமைந்திருக்கும் கருப்பசாமி ஆலயம் மக்கள் என்று புது அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைய திருவனந்தபுரத்தின், பழைய பெயரான அனந்தன் காடு, காடுகள் அழித்து நகரமயமாக்கல் ஏற்பட்டதற்கான ஒரு சாட்சியாக இன்று திகழ்ந்து கொண்டிருப்பதை அறியும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.

அனந்தன் காடு, ஆச்சரிய உலகம்!

Comments (0)
Add Comment