a K Vijay Anandh review
இது ஒரு சாதாரண திருட்டு கும்பல் பற்றிய கதைதான் என்றாலும் இந்த படத்தில் தான் அர்ஜுன் தாஸ் ஒரு முழுமையான கதாநாயக அந்தஸ்து பெறும் உடல் மொழியோடு நடித்திருக்கிறாரோ என்று என்ன தோன்றுகிறது, ரசிகர்கள் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!
அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, சிறுவன் மேற்கு கர்நாடக பகுதியில் உணவகம் நடத்தும் இவர்களை ஆரம்பத்தில் பார்க்கும் பொழுது… அடடா என்ன ஒரு குடும்பம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள், அவர்களது குழந்தை கடத்தப்படுகிறது, யார் கடத்துகிறார்கள் அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் மீதி கதை. இவர்களைப் பற்றிய பிளாஷ்பேக் விரியும் பொழுது, இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் சூழ்நிலை காரணமாக பணமோசடிகளில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.
மின்வாரிய அலுவலகத்தில் கேசியராக பணி புரியும் அர்ஜுன் தாஸ், அவரது அம்மா விட்டுச் சன்ற கடன்களை அடைப்பதற்காக, மின்சார வாரிய கல்லாவிலேயே, கை வைப்பதும், அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் அவருக்காக மூத்த ஊழியர் ஆன vtv கணேஷ் வக்காலத்து வாங்குவதும் வெடி சிரிப்பு ரகம். கட்டணம் செலுத்திய பிறகும் கரண்டை பிடுங்கி பிறகு தான், சம்பந்தப்பட்டவர்கள் மின்சார வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்க அதன் பின்பு தான் விபரீதம் புரிகிறது.
நன்கு படித்த நேர்மையான வேறு கனவுகள் கொண்ட ஆண்களோ பெண்களோ தேவையில்லாத நிதிச் சுமைக்கு உள்ளாகும் பொழுது அவர்களை அறியாமல், மற்றவர்களை ஏமாற்ற துணிந்து பண மோசடி செய்து பணக்காரர்கள் ஆகி தங்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவர முயற்சி செய்கிறார்கள் என்கிற ஒரு உளவியலை மையமாக வைத்து இந்த படத்தை ஹாரிஸ் துரைராஜ் இயக்கியிருக்கிறார் போலும்!
இதில் கதாநாயகன் கனவில் இருக்கும் யோகி பாபு உம் அவரது அம்மா வடிவுக்கரசியும் வந்து சிக்கிக் கொள்வது சுவாரசியம்.
வடிவுக்கரசி, கேட்கவா வேண்டும், சீனியர் சீனியர் தான். சென்டிமென்ட்டா ? டார்க் காமெடியா ? எல்லாவற்றையும் சும்மா லெஃப்ட் ஹேன்டில் அசால்டாக டீல் செய்கிறார்.
யோகி பாபு, தான் நடிக்க வேண்டிய படத்தில் இன்னொருவர் நடித்து வெளியாக இருக்கும் செய்தியை அறிந்து உடையும் காட்சிகளில், தனக்கு சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் தெரியும் என்று காட்டியிருக்கிறார். தான் அழுது அம்மா உடைந்து போய்விடக் கூடாதே என்பதற்காக சமாளிக்கும் காட்சியும் அற்புதம்.
அன்னா பென், கொட்டுக்காளியில் தனது திறமையை நிரூபித்தவர், இந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். இதன் பிறகு ரெகுலரான நாயகியாக தமிழ் சினிமாவில் பவனி வருவார் என்று நம்பலாம்.
ஒரே திருட்டை ஒரே இடத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது அல்லவா அதனால் அவர்கள் ஊர் விட்டு ஊர் சென்று திருட ஆரம்பிக்கிறார்கள் என்பதாக படத்தை முடித்து இருக்கிறார்கள்.
கான் சிட்டி, கமர்ஷியல் மசாலா !