எங்கள் தங்கம்

Rating 3.5/5

a K Vijay Anandh review

சமந்தா, ஆக்சன் ஹீரோயின் ஆக அவதாரம் எடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறார். விவரம் தெரியாத வயதில் நக்சல் இயக்கத்துடன், இணைத்துக் கொண்டவர் ஒரு கட்டத்தில் அதில் இரந்து வெளியேறி ஒரு பெரிய குடும்பத்து டாக்டர் மணமகனை காதலித்து மணக்கிறார். இரண்டு வருடங்களாக, பெரிய வீட்டில் தங்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் நடைபெறும் விசேஷத்தை முன்னிட்டு குடும்பத்துடன் இணைகிறார்கள்.

முழுமையாக அந்த குடும்பத்தினர் சமந்தாவை ஏற்றுக் கொள்கிறார்களா?

பழைய நக்sசல் தொடர்பு புதுப் பிரச்சினையைக் கிளப்ப அதிலிருந்து தன்னை ஏற்றுக்கொண்ட குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்?

என்பதே எங்கள் தங்கம் திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

சில வாரங்களுக்கு முன் Blast திரைப்படம் ஒரிஜினல் தமிழ் திரைப்படமாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதும், தமிழகத்தை பொறுத்தவரை நக்சல் இயக்கங்களின் தாக்கம் அதிகம் இல்லாததும் எங்கள் தங்கம் படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.

ஆனால்,  தமிழகத்திற்கு வெளியே கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், நக்சல் இயக்கத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதால் இந்த படம் தமிழகத்திற்கு வெளியே மிகப்பெரிய வெற்றி பெறும் என்றால் மிகையல்ல.

அதேநேரம், இந்தியா முழுவதும் நக்சல் இயக்கங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அதில் தங்களை இணைத்துக் கொண்ட ஆண்களும் பெண்களும் மறுவாழ்விற்கான முதல் அடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில் வெளிவந்திருக்கும் எங்கள் தங்கம் திரைப்படத்தின் தாக்கம் நிச்சயம் அவர்களுக்குள் ஒரு நேர்மறை மாறுதல்களை ஏற்படுத்தும்.

எங்கள் தங்கம் படத்தின் நாயகி சமந்தாவை போல, இந்தியா முழுவதும் நக்சல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு நரக வேதனை அடைந்த இளம் பெண்கள், இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தால், தங்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்கிற நம்பிக்கையை பெறுவார்கள்.

அந்த விதத்தில் இந்த கதையை உருவாக்கிய ராஜ் நிடிமுரு , இயக்கிய நந்தினி ரெட்டி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மற்றபடி, நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் எந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை தெலுங்கு படங்களில் குறிப்பாக தமிழகத்திற்கு வெளியே எடுக்கப்படும் படங்களில் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அற்புதமாக காட்சிப்படுத்துகிறார்கள். நமது பழக்கவழக்கம், ஆன்மீகம், உணவு முறைகள், உறவு முறைகள் என்று அட்டகாசமாக காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறையினருக்கு அவற்றை ரசிக்க வைக்கும் பாடங்களாக எடுத்து ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

அந்த விதத்தில், தெலுங்கை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பாராட்டத்தக்கவையாக அமைந்து விடுகின்றன, அதில் இந்த தங்கமும் ஒன்று!

 

Comments (0)
Add Comment