தி ஒடிஸி

Rating 3.5/5

a K Vijay Anandh review

முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாக, முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி (The Odyssey)’ வெளியாகியிருக்கிறது.

ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை அடிப்படையாக வைத்து, நோலனின் 13 ஆவது முழுநீளத் திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்தப்படம் இந்திய புராணங்கள் மற்றும் தமிழ்பக்தி இலக்கியங்களையும் நினைவு படுத்த தவறவில்லை.

இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது.

தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.

கிட்டத்தட்ட சீதையின் சுயம்வரத்தை  நினைவுபடுத்தும் இந்த காட்சியை மிகவும் அற்புதமான ஆக்ஷன் விருந்தாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

இதைத்தவிர திருவிளையாடல் புராணத்தில் வரும்  நரியை பரியாக்கிய நிகழ்வை ஒத்து,  தனியாக தங்கியிருக்கும்  மந்திரவாதி போன்ற ஒரு கதாபாத்திரம், தன்னை தேடி வருபவர்களுக்கு விருந்து அளித்து, பன்றியாக்கிவிடுகிறார். பின் மீண்டும் அவர்களை மனிதனாக்குகிறார்.  மிகவும் பயங்கரமாக படமாக்கப்பட்ட அந்த காட்சி ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும்.

திரையரங்குகளில் இப்படத்தை பார்த்த போது, நான் லீனியர் முறையில் சொல்லப்படும் கதையை நன்கு கவனித்து சில இடங்களில் ரசிகர்கள் பலத்த கரகோஷங்கள் எழுப்புவது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது

அந்த அளவிற்கு கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார்.

மேட் டாமன் – ஒடிசியஸ், இத்தாகாவின் அரசன்
டாம் ஹாலண்ட்  – டெலிமக்கஸ், ஒடொசியஸின் மகன்
ஆன் ஹாத்வே – பெனிலோப், இத்தாகாவின் அரசி
ராபர்ட் பேட்டர்சன்
லூபிடா நியாங்கோ
சம்ந்தா மார்டன்

*தொழில்நுட்பக் குழு:*

ஒளிப்பதிவு – ஹாய்டே வான் ஹாய்டெமா
இசை – லுட்விக் கோர்டான்சன்
படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் – ஸ்காட் ஃபிஷர்
விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்-  ஆண்ட்ரூ ஜாக்சன்
உடை வடிவமைப்பு – எலன் மிரோஜ்னிக்

Comments (0)
Add Comment