ஜனநாயகன்

No Rating , Just 'Celeb'Rating

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடுவதெற்கென்று பொருத்தமான ஷாட் க்காக பட வெளியீடு தாமதமாகியிருக்கிறது போலும். யு ஆர் பினிஷ்டு என்று சட்டசபையில் காட்டிய அந்த ஆக்ஷன் அற்புதம்.

ஜனநாயகன் , ஒரு படம் மாதிரி தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தால் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் நாட்டின் வளத்தை சூறையாடி தின்று கொழுத்த, இந்த தமிழ் மக்களின் எதிரிகளிடமும் தேசத்தின் எதிரிகளிடமும் சமரசம் இல்லாமல் மோதி , அவர்களை கூண்டோடு அழித்து தமிழ் மக்களையும் இந்திய தேசத்தையும் காத்து நிற்பேன் என்கிற ஒரு உறுதிமொழி என்று சொல்லலாம்.

எல்லோரும் தைரியமாக வந்து ஊட்டுப்போட்டு தீயசக்திகளை ஒழிக்கவேண்டும் , பயத்தை விடவேண்டும் , அதற்கு பயமே இல்லாத ஒருவனைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நிழல்கள் ரவி , TVK பற்றி மக்களுக்கு கதையாக சொல்ல ஆரம்பிக்கிறார். TVK , தளபதி வெற்றி கொண்டான் என்கிற நேர்மையான அதைவிட அதிகமான துடிப்புள்ள காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆக வரும் , விஜய்யின் கதாபாத்திரப்பெயர்.

தன்னுடைய அம்மா இழந்த நிலையில், இனி நான் தான் உனக்கு அம்மா என்று கூறி அரவணைக்கும் குழந்தை விஜியை அம்மாவாக ஏற்றுக்கொண்டு கடைசி வரை அவரைக்காத்து நிற்பதை , நாம் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவேண்டும். இனி அவருக்கு எல்லாமே , தமிழ்நாடும் , தமிழ்நாட்டு மக்களும் தான். முக்கியமான விஷயம் என்னவென்றால் , இதை விஜய் சொல்வதால் ரசிக்கமுடிகிறது, நம்பவும் முடிகிறது.

அந்த விஜி ஆக நடித்திருக்கும் மமிதா பைஜூ , மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். அவரை வைத்து தான் கதையின் முக்கிய சம்பவங்கள் எல்லாமே !

பத்திரிகையாளராக வரும் பூஜா ஹெக்டே , சரி நமக்கு இனிமே காதல், கல்யாணம் இதெல்லாம் வேண்டாம் என்று தளபதி முடிவெடுத்து விட்ட படியால் , அங்கே ரொமாண்டிக் காட்சிகளுக்கு இடமில்லை . விஜயின் இலக்கை அடையும் பயணத்தில் , கூடவே பயணிக்கிறார் , அவ்வளவுதான்.

“இங்கே, நாங்கதாண்டா ராஜா … 50 வருஷமா நாங்க தான் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்கோம் , நேற்று எங்கப்பா , இன்னைக்கு நான் , நாளைக்கு எம்மவன்..” என்று விஜய் படத்தில் ஒரு சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சியின் மொள்ளமாரித்தனத்தை பிரதிபலிக்கும் பிரகாஷ்ராஜை , நிஜத்தில்தே கட்சியின் ஆட்சி நல்லா இருக்கு என்று இன்னொரு சம்பளம் கொடுத்து பத்திரிகைகளில் பேச வைத்து புளகாங்கிதம் அடைந்த அந்த கட்சிக்காரர்களை என்னவென்று சொல்வது ! தக்காளி உங்களை கூப்புல உட்கார வைச்சது சரிதாண்டா !!

பாபி தியோல் , உள்ளூர் காவல்துறை உயரதியாக இருந்து , சர்வதேச டானாக மாறி பின் , தொடர்ந்து தவறான அரசியல்வாதிகளுக்கே ஓட்டுப்போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துழுக்குபார்க்கும் தமிழக மக்களை பழிவாங்க துடிக்கிறார். ஆட்சிக்கட்டில் என்பதாலாயோ என்னமோ , அவய்ங்க என்னடான்னா ஹாயாக படுத்து அடுத்த அஞ்சு வருஷத்தையும் வீணடிச்சுட்டு போயிடுறாய்ங்க, அடிக்க வேண்டிய கொள்ளையை அடிச்சுட்டு.

அரசியல் நையாண்டி, சமூக நீதி , பெண்கள் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் , விஞ்ஞான ஊழல் பெருச்சாளியை ஒழித்தல், ரிமோட் கண்ட்ரோல் வார் என்று ஒரு பெரிய பொழுதுபோக்கு விருந்தையும் படைத்திருக்கிறார்கள்.

அனிருத்தின் இசை , அட்டகாசம். ஹெச் வினோத் , இன்றைய தேதிக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

தளபதி சி ஜோசப் விஜயின் , நிஜமான போர்ப்படைத்தளபதிகளான புஸ்ஸி ஆனந்த் , அருண்ராஜ் , ஸ்ரீநாத் உள்ளிட்டவர்களை முக்கியமான காட்சிகளில் பயன்படுத்தியிருப்பதையும் ரசிக்க முடிகிறது.

எம் ஜி ஆர், தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட மந்திரச்சொல். எதிரிகளை குலை நடுங்க வைத்து கடைசி வரை கூப்பில் உட்காரவைத்த அற்புதமான அரசியல் தலைவன். அவருக்குப்பிறகு , அவர் கட்சிக்கு வெளியே உருவான இன்னொரு எம் ஜி ஆராய் , தளபதி சி ஜோசப் விஜய்.

அடுத்த தளபதி , TVK இல் இருந்து தான் வரவேண்டும் என்பது இல்லை , என்பது பிரபஞ்சம் மட்டும் அல்ல இந்தப்படமும் சொல்லியிருக்கிற செய்தி !!

Comments (0)
Add Comment